शून्यतां वा शून्यतायां व्यर्थता शब्दगोचरे ।
युगपद्वा घटाद्यर्था जगत्यानन्त्यमागताः ॥७९॥
śūnyatāṃ vā śūnyatāyāṃ vyarthatā śabdagocare |
yugapadvā ghaṭādyarthā jagatyānantyamāgatāḥ
அல்லது (சொல்) ஶூன்யத்தை (வெறுமையை உணர்த்துகிறதா)? சொல்லின் கோசரத்தில் (எல்லையில்) வெறும் ஶூன்யமே இருந்தால், (அஃது) வீணே; அல்லது (மற்ற அனைத்தையும் விலக்க) கடம் முதலிய அனைத்துப் பொருள்களையும் ஜகத்தில் ஒரே சமயத்தில் (அறியவேண்டி) முடிவின்மையை அடைகின்றன (அபோஹக் கொள்கையின் இயலா கோரிக்கை).