The Vision of Śiva· 6.71 / 126

The Vision of Śiva6.71

6.71
कुतो घटस्य जननाकारनामावधारणम् । यावता प्राग्दशानष्टा न प्रवृत्तिरथान्यथा ॥७१॥
kuto ghaṭasya jananākāranāmāvadhāraṇam | yāvatā prāgdaśānaṣṭā na pravṛttirathānyathā
— எங்கிருந்து? ; — கடத்தின் ; — உற்பத்தி, ஆகாரம் (வடிவம்), நாமம் (பெயர்) ஆகியவற்றின் நிர்ணயம் ; — எந்த அளவு (வரை) ; — முந்தைய (களிமண்) நிலை ; — அழியாதிருக்க ; — (செய்வோனின்) ப்ரவ்ருத்தி (ஈடுபாடு) இராது ; — வேறுவகையாக (இருக்கவேண்டும்)

முந்தைய (களிமண்) நிலை (கடம் தோன்றும்போது) அழியாதிருக்க, கடத்தின் உற்பத்தி, ஆகாரம் (வடிவம்), நாமம் (பெயர்) ஆகியவற்றின் நிர்ணயம் எங்கிருந்து? (அஃது அழிந்திருந்தால், கடத்தைத் தரும் தொடர்) ப்ரவ்ருத்தி இராது; ஆகவே (க்ஷணிகவாதி கருதுவதைவிட) வேறுவகையாக (இருக்கவேண்டும்).