घटो नश्यत्यात्मनेति किंचित्कुर्वन् किमात्मना ।
नश्यत्यात्मन्यकुर्वन् वा तदेवं स्थित एव सः ॥६०॥
ghaṭo naśyatyātmaneti kiṃcitkurvan kimātmanā |
naśyatyātmanyakurvan vā tadevaṃ sthita eva saḥ
(நீ சொல்கிறாய்) 'கடம் தானே அழிகிறது' என்று. ஆனால் அஃது தன் ஆத்மாவில் எதையேனும் செய்துகொண்டு அழிகிறதா, அல்லது தன் ஆத்மாவுக்கு எதையும் செய்யாமலா? எதையும் செய்யாமல் (அழிந்தால்), அப்போது அஃது (அழியாமல்) நிலைபெறுகிறதே.