यत्र देशे च काले च प्रवृत्तिस्तत्र संगमः ।
तत्रैव व्यवहारित्वसम्बन्धान्तरतायतः ॥६३॥
yatra deśe ca kāle ca pravṛttistatra saṃgamaḥ |
tatraiva vyavahāritvasambandhāntaratāyataḥ
எந்தத் தேசத்திலும் காலத்திலும் (வெற்றிகரமான) ப்ரவ்ருத்தி (செயல்) உண்டோ, அங்கே (சொல்-பொருளின்) ஸங்கமம் (சேர்க்கை) உண்டு; அங்கேயே வ்யவஹாரத்தன்மை என்னும் மேலும் ஒரு ஸம்பந்தமும் (உண்டாகிறது), அதனின்றே (அடிப்படை ஐக்கியத்தினின்றே இது வருகிறது).