The Vision of Śiva· 5.33 / 110

The Vision of Śiva5.33

5.33
चक्षूरश्मिगमत्वं चेत् स प्रत्यक्षोऽर्करश्मिवत् । भावानां प्रतिबिम्बत्व आत्मनोऽपि न युक्तता ॥३३॥
cakṣūraśmigamatvaṃ cet sa pratyakṣo'rkaraśmivat | bhāvānāṃ pratibimbatva ātmano'pi na yuktatā
— காட்சிக்கதிர் வெளிச்செல்லுதல் ; — என்று கல்பித்தால் ; — அது ; — ப்ரத்யக்ஷமாக (புலனாக)த் தோன்றுவது ; — ஸூர்ய-கதிர் போல் ; — பொருள்களின் ; — (அவை) பிரதிபிம்பங்களாயின் ; — ஆத்மாவுக்கும் ; — பொருத்தமில்லை

கண்-கதிர் (பொருளை நோக்கி) செல்வதாயின், அது ஸூர்ய-கதிரைப் போல் ப்ரத்யக்ஷமாகத் (கண்ணுக்குப் புலனாக) தோன்றவேண்டும் (ஆனால் தோன்றுவதில்லை). பொருள்கள் (ஆத்மாவில்) பிரதிபிம்பங்களாயின், ஆத்மாவுக்கும்கூட பொருத்தம் இராது.