तथा सा प्रत्यभिज्ञानात्स एवायमिति स्थितिः ।
युज्यते कथमत्रैव ज्ञानयोः कालभिन्नयोः ॥१२०॥
tathā sā pratyabhijñānātsa evāyamiti sthitiḥ |
yujyate kathamatraiva jñānayoḥ kālabhinnayoḥ
அவ்வாறே, 'இவன் அவனே' என்னும் அந்த நிலைப்பு ப்ரத்யபிஜ்ஞையால் (மீள்-அறிதலால் உண்டாகிறது); வேறுவேறு காலத்தனவான இரு ஞானங்களுக்கு இங்கேயே (இது) எவ்வாறு பொருந்தும்?