1.26 बुद्धिं विना कथं बोधः सा बुद्धिः प्रकृतेः प्रजा । न च तस्य तया योग इति चेदपरस्थितौ ॥२६॥ buddhiṃ vinā kathaṃ bodhaḥ sā buddhiḥ prakṛteḥ prajā | na ca tasya tayā yoga iti cedaparasthitau buddhiṃ vinā — புத்தி இன்றி ; katham — எவ்வாறு ; bodhaḥ — போதம் (அறிவு) ; sā — அந்த ; buddhiḥ — புத்தி ; prakṛteḥ — ப்ரக்ருதியின் ; prajā — ப்ரஜை (மகள், சந்ததி) ; na ca — ஆனால் இல்லை ; tasya — அவனுக்கு (சிவனுக்கு) ; tayā — அதனுடன் ; yogaḥ — யோகம் (சேர்க்கை, இணைப்பு) ; iti cet — என்று (ஒருவன் சொன்னால்) ; aparasthitau — (அவனது) கீழ்-நிலையில் "புத்தி இன்றி போதம் (அறிவு) எவ்வாறு? அந்த புத்தி ப்ரக்ருதியின் ப்ரஜை (மகள்); அதனுடன் அவனுக்கு (சிவனுக்கு) யோகம் (சேர்க்கை) இல்லை" என்று ஒருவன் சொன்னால் — அது அவனது (சிவனின்) கீழ்-நிலையில் (பொருந்தும்).