— இனி, மேலும்; — பொருளின்; — எவ்வாறு; — வடிவத்தை; — ஏற்கிறது; — புத்தி; — அவ்வாறே; — ஆத்மாவின்; — சைதன்யத்தை; — அஜடமாக இருந்து; — அது (புத்தி); — இவ்வாறு; — ஜடத்தன்மை இருந்தால்; — இல்லை; — பொருளை வெளிப்படுத்தும் தன்மை
புத்தி பொருளின் வடிவத்தை எவ்வாறு ஏற்கிறதோ, அவ்வாறே ஆத்மாவின் சைதன்யத்தையும் ஏற்கிறது; அவ்வாறு அஜடமாக இருப்பதால் அதுவே (பொருளை வெளிப்படுத்துகிறது); ஜடத்தன்மையிருந்தால் பொருளை வெளிப்படுத்தும் தன்மை இல்லை.