तदुपरागकृतश् च शक्तिमत्सु प्रमातृषु भेदः करणभेदस्य कर्तृभेदपर्यवसानात् शक्तेर् एव च अव्यतिरिक्तायाः करणीकर्तुं शक्यत्वात् न अन्यस्य अनवस्थाद्यापत्तेः
Transliteration (IAST)
taduparāgakṛtaś ca śaktimatsu pramātṛṣu bhedaḥ karaṇabhedasya kartṛbhedaparyavasānāt śakter eva ca avyatiriktāyāḥ karaṇīkartuṃ śakyatvāt na anyasya anavasthādyāpatteḥ
அந்தச் சக்தியின் உபராகத்தினால் (கலப்பினால்) சக்திமான்களாகிய அறிபவர்களிடத்தே வேறுபாடு உண்டாகிறது; ஏனெனில் கரணத்தின் (கருவியின்) வேறுபாடு கர்த்தாவின் வேறுபாட்டில் முடிவடைகிறது; சக்தியே, தன் உடையோனிடமிருந்து வேறுபடாதிருப்பதால், கரணமாக ஆக்கப்படக் கூடியது; வேறெதுவும் ஆகாது, ஏனெனில் அவ்வாறாயின் அநவஸ்தை (முடிவிலாப் பின்னோட்டம்) முதலிய குற்றங்கள் நேரும்.