संसारस्यानुपाल्यत्वाद्द्वेषादिमलहानितः ।
अथवा स्वात्मविभवपरमानन्दतृप्तितः ॥१०९॥
saṃsārasyānupālyatvāddveṣādimalahānitaḥ |
athavā svātmavibhavaparamānandatṛptitaḥ
(விடுதலையுற்றோர் உலகைத் தொடர நடத்த முயலார்,) ஏனெனில் ஸம்ஸாரத்தைத் (பிறவித்தொடரைத்) தாங்கவேண்டியதில்லை; (இது) த்வேஷம் (வெறுப்பு) முதலிய மலங்களை (தோஷங்களை) விட்டொழிப்பதனின்றும், அல்லது தம் சொந்த ஆத்மாவின் மகிமையாகிய பரமானந்தத்தின் த்ருப்தியினின்றும் (நிறைவினின்றும் வருகிறது).