Verses on the Recognition of the Lord2.11
द्विष्ठस्यानेकरूपत्वात् सिद्धस्यान्यानपेक्षणात्
पारतन्त्र्याद्ययोगाच् च तेन कर्तापि कल्पितः ॥११॥
dviṣṭhasyānekarūpatvāt siddhasyānyānapekṣaṇāt
pāratantryādyayogāc ca tena kartāpi kalpitaḥ
— இரண்டிலும் (காரண-காரியத்தில்) நிற்பதன் ; — பல வடிவமுடைமையால் ; — நிறுவப்பட்டதன் ; — பிறிதொன்றை எதிர்நோக்காமையால் ; — பாரதந்த்ரியம் முதலியன பொருந்தாமையால் ; — மற்றும் ; — ஆதலின், அதனால் ; — செய்பவன், கர்த்தா ; — கூட ; — கல்பிக்கப்பட்டது, கற்பிதம் (எதிராளி முடிக்கிறான்:) இரண்டிலும் (காரண-காரியத்திலும்) நிலைப்பது பல வடிவமுடையதாதலாலும், நிறுவப்பட்டது பிறிதொன்றை எதிர்நோக்காமையாலும், பாரதந்த்ரியம் முதலியன பொருந்தாமையாலும் — ஆதலின் 'செய்பவனும்' கல்பிதமான ஒன்றேயாகும்.