दातव्यमिति यद्दानं दीयतेऽनुपकारिणे ।
देशे काले च पात्रे च तद्दानं सात्त्विकं स्मृतम् ॥
१७-२० ॥
dātavyamiti yaddānaṃ dīyate'nupakāriṇe |
deśe kāle ca pātre ca taddānaṃ sāttvikaṃ smṛtam ||
17-20 ||
— 'தானம் செய்யப்படவேண்டியது' என்ற எண்ணத்துடன் எது அளிக்கப்படுகிறதோ; — கைம்மாறு செய்யாதவனுக்கு; — தக்க இடம், காலம், தகுதியுடையவனுக்கு; — அந்த தானம் சாத்விகம் எனப்படுகிறது
"தானம் செய்யப்படவேண்டியது" என்ற எண்ணத்துடன், கைம்மாறு செய்யாதவனுக்கு, தக்க இடம், காலம், தகுதியுடையவனுக்கு அளிக்கப்படும் தானம் சாத்விகம் எனப்படுகிறது.