मलित्वमात्मनां प्रोक्तं सर्वभावेषु भेदिता ।
सत्यमुक्तमारुरुक्षोस्तत्क्रमप्रतिपत्तये ॥९४॥
malitvamātmanāṃ proktaṃ sarvabhāveṣu bheditā |
satyamuktamārurukṣostatkramapratipattaye
(விடை:) ஆத்மாக்களின் மலத்தன்மை (கறையுடைமை) கூறப்பட்டது, அனைத்துப் பொருள்களிலும் பேதம் (வேறுபாடு) கூறப்பட்டது — உண்மை, அவ்வாறு கூறப்பட்டது, (ஆயினும்) ஏறவிரும்புவோனுக்கு, அந்தப் (மீள்அறிவை நோக்கிய) படிநிலையை அறிவதற்கே (கூறப்பட்டது).