तदप्यस्ति कर्तृता चेत्तेषां तत्तादृशं न किम् ।
अथ राज्ञो यथा राज्यकर्म विदधतः सुखम् ॥११२॥
tadapyasti kartṛtā cetteṣāṃ tattādṛśaṃ na kim |
atha rājño yathā rājyakarma vidadhataḥ sukham
அந்தக் கர்த்தாத்தன்மையும் (சிவனுக்கு) உண்டு என்றால் — அத்தகைய (கர்த்தாத்தன்மை, விடுதலையுற்றோருக்கும்) ஏன் அதே வகையானதாய் (இடையூறற்றதாய்) இராது? இனி, அரசன் அரசாட்சியின் செயலைச் செய்கையில் (அவனுக்கு வருந்தாமல்) இன்பமே (உள்ளது) போல்.