अथेदानीं प्रवक्तव्यं यथा सर्वं शिवात्मकम् ।
नाशक्तो विद्यते कश्चिच्छक्तं वस्त्वेव तेऽपि नो ॥१॥
athedānīṃ pravaktavyaṃ yathā sarvaṃ śivātmakam |
nāśakto vidyate kaścicchaktaṃ vastveva te'pi no
இனி இப்போது, அனைத்தும் எவ்வாறு சிவ-ஆத்மகம் (சிவத்தையே ஸ்வரூபமாகக் கொண்டது) என்பது எடுத்துரைக்கப்படவேண்டும்; ஶக்தியற்ற (அஶக்த) எதுவும் இல்லை; ஶக்த-வஸ்துவே (ஆற்றலுடைய பொருளே) மெய்; அவை (பாவங்கள்)கூட ஶக்தியற்றவை அல்ல.