— (மறுப்பு) திண்ணமாக, இதோ; — ஸ்வலக்ஷணமாகத் தோன்றும் (தனிப்பொருளாகத் தோன்றும்); — அறிவு; — ஒன்று (ஒருவகை); — மற்றொன்று (மறுவகை); — மறுபுறம், மீண்டும்; — சொல்லுடன் கூடிய (நிச்சயமான); — விகல்பம் என்னும் பெயருடைய; — பல்வகை, பல்வேறு; — இல்லை; — கூட, மேலும்; — அது (அறிவு); — இருமை (கிராஹ்ய-கிராஹகம்)
(மறுப்பு:) அறிவு ஒருவகையில் ஸ்வலக்ஷணமாக (தனிப்பட்ட சிறப்புப்பொருளாக) தோன்றுவது; மற்றொன்றோ விகல்பம் என்னும் பெயருடைய, சொல்லுடன் கூடிய, பல்வேறு வடிவமுடையது; அவ்வாறிருப்பினும் அந்த அறிவு (கிராஹ்ய-கிராஹக) இருமையுடையதன்று.