कस्माच्चैते न नमेयुर्महात्मन् गरीयसे ब्रह्मणोऽप्यादिकर्त्रे ।
अनन्त देवेश जगन्निवास त्वमक्षरं सदसत्तत्परं यत् ॥
११-३८ ॥
kasmāccaite na nameyurmahātman garīyase brahmaṇo'pyādikartre |
ananta deveśa jagannivāsa tvamakṣaraṃ sadasattatparaṃ yat ||
11-38 ||
மகாத்மாவே, பிரம்மனைவிடப் பெரியவனாகிய, முதல் படைப்பாளனாகிய உனக்கு அவர்கள் ஏன் வணங்கமாட்டார்கள்? முடிவற்றவனே, தேவேசா, ஜகந்நிவாசா, நீ அழிவற்றவன், சத்தும் அசத்தும், அவற்றுக்கு அப்பாற்பட்டதும் நீயே.