— போரிடப்போகும் இவர்களை; — நான் நோக்குகிறேன்; — இங்கே ஒன்றுகூடியுள்ள இவர்களை; — தீய புத்தியுடைய த்ருதராஷ்டிரன் மகனின்; — போரில் (அவனுக்கு) உகந்ததைச் செய்ய விரும்புவோர்
தீய புத்தியுடைய திருதராஷ்டிரன் மகனுக்குப் போரில் நன்மை செய்ய விரும்பி இங்கே ஒன்றுகூடிய, போரிடவிருக்கும் இவர்களை நான் காண விழைகிறேன்.