शब्दविशेषाणां हि क्षोभात्मनां यद् एकम् अक्षोभात्मकं प्राग्भावि सामान्यम् अविशेषात्मकं तत् शब्दतन्मात्रम्
Transliteration (IAST)
śabdaviśeṣāṇāṃ hi kṣobhātmanāṃ yad ekam akṣobhātmakaṃ prāgbhāvi sāmānyam aviśeṣātmakaṃ tat śabdatanmātram
ஏனெனில், க்ஷோப இயல்புடைய (கொந்தளிப்பு வடிவான) விசேட சத்தங்களுள் (சிறப்பு ஒலிகளுள்), அக்ஷோப இயல்புடைய (கொந்தளிப்பற்ற), முன்னதாகவே உள்ள, விசேடமற்ற (சிறப்பற்ற) ஒரு சாமான்யம் (பொதுமை) எதுவோ அதுவே சத்த தன்மாத்திரை (ஒலி-நுட்பப்பூதம்).