इयति साक्षात् शिवः कर्ता अशुद्धं पुनर् अध्वानम् अनन्तापरनामाघोरेशः सृजति ईश्वरेच्छावशेन प्रक्षुब्धभोगलोलिकानाम् अणूनां भोगसिद्ध्यर्थम्
Transliteration (IAST)
iyati sākṣāt śivaḥ kartā aśuddhaṃ punar adhvānam anantāparanāmāghoreśaḥ sṛjati īśvarecchāvaśena prakṣubdhabhogalolikānām aṇūnāṃ bhogasiddhyartham
இவ்வளவின் மீது (சுத்த மார்க்கத்தின் மீது) சிவனே நேரடியாகக் கர்த்தா (படைப்பவன்). மாறாக அசுத்த மார்க்கத்தை, அனந்தன் என்னும் மறு பெயர் கொண்ட அகோரேசன், ஈசுவர இச்சையின் வசத்தால், போகத்தில் (அனுபவத்தில்) ஆவல் கொண்டு கொந்தளித்த அணுக்களின் (கட்டுண்ட உயிர்களின்) போக சித்திக்காகச் சிருஷ்டிக்கிறான்.