अथ शक्तेः शक्तिमतो न भेदो द्रव्यकर्मवत् ।
स्थापितो द्रव्यतो भिन्ना क्रिया नो नच नास्ति सा ॥१॥
atha śakteḥ śaktimato na bhedo dravyakarmavat |
sthāpito dravyato bhinnā kriyā no naca nāsti sā
சக்திக்கும் சக்திமானுக்கும் (சக்தியுடையோனுக்கும்) வேறுபாடில்லை, த்ரவ்யத்திற்கும் (பொருளுக்கும்) அதன் கர்மத்திற்கும் (செயலுக்கும்) வேறுபாடில்லாதது போல்; இது நிறுவப்பட்டது. க்ரியை த்ரவ்யத்தினின்று (முற்றிலும்) வேறன்று, ஆயினும் அதனால் (அஃது) இல்லாததும் அன்று.