asaṃśayaṃ mahābāho mano durnigrahaṃ calam |
abhyāsena tu kaunteya vairāgyeṇa ca gṛhyate ||
6-36 ||
— ஐயமின்றி, பெருந்தோளுடையவனே; — மனம் கட்டுப்படுத்த அரியது, நிலையற்றது; — ஆனால் பயிற்சியால், குந்தியின் மகனே; — வைராக்கியத்தாலும் அது வசப்படுத்தப்படுகிறது
பெருந்தோளுடையவனே, ஐயமின்றி மனம் கட்டுப்படுத்த அரியது, நிலையற்றது; ஆனால் குந்தியின் மகனே, பயிற்சியாலும் வைராக்கியத்தாலும் அது வசப்படுத்தப்படுகிறது.