aphalākāṃkṣibhiryajño vidhidṛṣṭo ya ijyate |
yaṣṭavyamityeva manaḥ samādhāya sa sāttvikaḥ ||
17-11 ||
— பயனை விரும்பாதோரால், அந்த யஜ்ஞம்; — விதிப்படி எது அளிக்கப்படுகிறதோ; — 'இது செய்யப்படவேண்டியது' என்ற எண்ணத்தில் மட்டும் மனத்தை நிலைநிறுத்தி; — அது சாத்விகம்
பயனை விரும்பாதோரால், விதிப்படி, "இது செய்யப்படவேண்டியது" என்ற எண்ணத்தில் மட்டும் மனத்தை நிலைநிறுத்திச் செய்யப்படும் யஜ்ஞம் சாத்விகமானது.