चतुर्युगानाम् एकसप्तत्या मन्वन्तरम् मन्वन्तरैः चतुर्दशभिः ब्राह्मं दिनं ब्रह्मदिनान्ते कालाग्निदग्धे लोकत्रये अन्यत्र च लोकत्रये धूमप्रस्वापिते सर्वे जना वेगवद् अग्निप्रेरिता जनलोके प्रलयाकलीभूय तिष्ठन्ति
Transliteration (IAST)
caturyugānām ekasaptatyā manvantaram manvantaraiḥ caturdaśabhiḥ brāhmaṃ dinaṃ brahmadinānte kālāgnidagdhe lokatraye anyatra ca lokatraye dhūmaprasvāpite sarve janā vegavad agnipreritā janaloke pralayākalībhūya tiṣṭhanti
எழுபத்தொரு சதுர்யுகங்களால் ஒரு மன்வந்தரம்; பதினான்கு மன்வந்தரங்களால் பிரம்மாவின் ஒரு பகல். பிரம்மாவின் பகலின் இறுதியில், மூவுலகங்கள் காலாக்கினியால் எரியுண்டும், மற்றொரு மூவுலகம் புகையால் உறங்கச் செய்யப்பட்டும் இருக்கையில், எல்லா மக்களும் வேகமாய் அக்கினியால் தள்ளப்பட்டு, பிரளயாகலர்களாகி, ஜனலோகத்தில் தங்கியிருக்கின்றனர்.