ततस् तथैव परमेश्वरं पूजयित्वा तदग्रे शिष्यस्य प्राणक्रमेण प्रविश्य हृत्कण्ठतालुललाटरन्ध्रद्वादशान्तेषु षट्सु कारणषट्कस्पर्शं कुर्वन् प्रत्येकम् अष्टौ संस्कारान् चिन्तयन् कञ्चित् कालं शिष्यप्राणं तत्रैव विश्रमय्य पुनर् अवरोहेत्
Transliteration (IAST)
tatas tathaiva parameśvaraṃ pūjayitvā tadagre śiṣyasya prāṇakrameṇa praviśya hṛtkaṇṭhatālulalāṭarandhradvādaśānteṣu ṣaṭsu kāraṇaṣaṭkasparśaṃ kurvan pratyekam aṣṭau saṃskārān cintayan kañcit kālaṃ śiṣyaprāṇaṃ tatraiva viśramayya punar avarohet
பின்னர், அவ்வாறே பரமேசுவரனை வழிபட்டு, அவர் முன்பு, சிஷ்யனின் பிராண கிரமத்தினால் (மூச்சுவழி) நுழைந்து, இதயம், கண்டம் (தொண்டை), தாலு (அண்ணம்), லலாடம் (நெற்றி), ரந்திரம் (உச்சித் துளை), த்வாதசாந்தம் என்னும் ஆறு (இடங்களில்) கාரண ஷட்கத்தின் (ஆறு காரண ஈசுவரர்களின்) ஸ்பர்சத்தைச் (தொடுகையைச்) செய்து, ஒவ்வொன்றிலும் எட்டு சம்ஸ்காரங்களைச் சிந்தித்து, சிறிது நேரம் சிஷ்யனின் பிராணனை அங்கேயே ஓய்வுபெறச்செய்து, மீண்டும் கீழிறங்க வேண்டும்.