सत्त्वानुरूपा सर्वस्य श्रद्धा भवति भारत ।
श्रद्धामयोऽयं पुरुषो यो यच्छ्रद्धः स एव सः ॥
१७-३ ॥
sattvānurūpā sarvasya śraddhā bhavati bhārata |
śraddhāmayo'yaṃ puruṣo yo yacchraddhaḥ sa eva saḥ ||
17-3 ||
பாரதனே, ஒவ்வொருவரின் சிரத்தையும் அவரவர் உள்ளியல்புக்கேற்பவே உண்டாகிறது; இந்த மனிதன் சிரத்தைமயமானவன்; எவன் எந்த சிரத்தையுடையவனோ, அவன் அதுவே.