— இதையும் செய்ய நீ இயலாவிட்டால்; — என் யோகத்தைச் சார்ந்தவனாய்; — எல்லாச் செயல்களின் பயனையும் துறத்தலை; — அப்போது செய்வாயாக, தன்னைக் கட்டுப்படுத்தியவனாய்
இதையும் செய்ய இயலாவிட்டால், என் யோகத்தைச் சார்ந்து, தன்னைக் கட்டுப்படுத்தி, எல்லாச் செயல்களின் பயனையும் துறப்பாயாக.