ये द्रुह्यन्ति खलाः पापाः परब्रह्मोपदेशिने ।
स्वद्रोहं ते प्रकुर्वन्ति नातिरिक्ता यतः सतः ॥२९॥
ye druhyanti khalāḥ pāpāḥ parabrahmopadeśine |
svadrohaṃ te prakurvanti nātiriktā yataḥ sataḥ ||29||
பரம பிரம்மத்தை உபதேசிப்பவனுக்குத் தீங்கிழைக்கும் தீய பாவிகளான கயவர்கள், தமக்கே தீங்கிழைக்கின்றனர்; ஏனெனில் (அவனும் அவர்களும்) சத்திலிருந்து வேறானவரல்ல.