न मत्सरा नातिरुष्टा नातिलुब्धा न कामुकाः ।
सदन्तःकरणाः सर्वे सर्वदाऽनन्दमानसाः ॥२६॥
na matsarā nātiruṣṭā nātilubdhā na kāmukāḥ |
sadantaḥkaraṇāḥ sarve sarvadā'nandamānasāḥ ||26||
பொறாமையுடையோர் இல்லை, மிகுந்த சினமுடையோர் இல்லை, மிகுந்த பேராசையுடையோர் இல்லை, காமுகர் இல்லை; எல்லோரும் தூய அந்தக்கரணமுடையவர்களாய், எப்போதும் ஆனந்த மனத்தினராய் இருந்தனர்.